பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 8. தோற்றமும் புகழும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, - . . . . . . தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நண்று (236) என்று பாடல் பற்றிக் குறிப்பிட்டார்கள். அது என்ன குறள்? அர்த்தம் புரியாத பொருளாக இருக்கிறது. ஒருவர் பிறக்கும் போதே புகழுடன் தோன்ற வேண்டும் . இல்லையேல், பிறக்காமல் இருப்பது நல்லது என்று பாடியிருக்கிறாரே வள்ளுவர்? - அது எப்படி பிறக்காமல் இருக்க முடியும்? புகழொடு தோன்ற முடியும் என்றெல்லாம் பேசினார்கள். - வீட்டுக்கு வந்ததும், குறளுக்குரிய பல உரை நூல்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். இதோ அந்த உரைவிளக்கங்கள். 'மக்களாகப் பிறக்கின், புகழுக்கேதுவாகிய குணத்தோடு பிறக்க. அக் குணமில்லாதார், மக்களாய்ப் பிறத்தலின், விலங்காய் பிறத்தலின் நன்று' என்று பரிமேலழகரின் உரை இருந்தது. - - = -- மக்களாகப் பிறந்தால், புகழ் உடம்பை அதற்கேற்ற குணங்களுடன் பிறத்தல் வேண்டும் அத்தன்மை - இல்லாதவர்கள் மனிதராய்ப்பிறத்தலை விட, பிறவாதிருத்தலே நன்றாகும். விலங்காய் பிறத்தல் நன்று என்று திருக்குறளார் முனுசாமி உரையில் இருந்தது. - - - "ஒருவர் புக விரும்புகின்ற துறையில் புகழோடு விளங்க முடியும் என்றால், அந்தத் துறையில் தோன்ற வேண்டும். அதற்கான அறிவுத் திறனும், ஆற்றல் திறனும் வாய்ப்பும் இல்லாதவர்கள், அந்தத்துறையில் புகுவதைவிட, புகாமல் இருப்பது நல்லது' என்று நாவலர் உரை தந்திருந்தார். -