பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 3 புகழ்மிக்க சில குறள்களுக்குப் புதிய பொருள் முன்னுரை: - குறள் பற்றி உங்களுக்குத் தெரியாததல்ல. படித்து மகிழ்ந்தவர்கள் அதிகம். அதை அனுபவித்து ரசித்தவர்கள் அநேகம். அதைப் பின்பற்றி நடந்து உயர்ந்தவர்கள் இன்னும் அதிகம். ஆனால் படிக்காமலேயே படித்தது போல் நடித்துப் பேசுபவர்களோ ஆயிரம் ஆயிரம். படித்துச் சுவைத்து ரசித்து, அதில் ஒன்றிப் போனவர்கள் சிலர். அதற்கு உரையெழுதிப் பார்த்தவர்கள் தங்கள் உணர்வுகளை அதன் மேல் ஏற்றி, தங்களுக்குத் தகுந்த மாதிரி, பொருள் கூறிப் போனாவர்கள் பலர். வள்ளுவரைப் பெளத்தர் என்றனர் சிலர். சமணர் என்றனர் சிலர். இந்து மதத்தின் இணையிலாப் பற்றினர் என்றனர் பலர். எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் அவர் பொருந்து பவராகவே இருந்தார். குறளுக்கு உரை கண்டவர்கள் பரிமேலழகர், தருமர், மணக்குடவர். தர்மதத்தர், நச்சர், பருதி திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் போன்றோர். முற்காலத்தவர்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கா.அப்பாத்துரை, புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர், புலவர் ஆதித்தனார், கு.ச ஆனந்தன். டாக்டர் மு.வ, வ.உ.சி., திருக்குறள் முனுசாமி, போன்றவர்கள் தற்காலத்தவர்கள். தெளிவுரை என்பதாகச் சொல்லிச் சென்றார்கள். நான் சில ஆய்வுக்காக. திருக்குறளைப் படித்து சுவைத்த போது என்னுடைய மனோநுட்பங்களுக்கு ஏற்ப தெரிந்து கொண்ட புதிய சிந்தனைகளை இந்த நூலில் படைத்திருக்கிறேன்.