பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ் , நவராஜ் செல்லையா மன்றத்திலே நுழைய வேண்டும். உண்னை ஆர்வத்தோடு, அன்பின் பெருக்கத் தோடு, மனதார ஏற்று, அகத்தாலும் புறத்தாலும் வரவேற்று, பெருமைகள் பெறுவது போல, நீ தோன்ற வேண்டும் என்றார் வள்ளுவர். - . மனிதர்களுக்குத் தன்னம்பிக்கை என்பது இருந்தாலும் . தன்னைப் பற்றிய பெருநினைவு(Ego) என்பது மிக அதிகமாக உண்டு. அந்தப் பெருநினைவைத் தற்பெருமை என்பார்கள். தற்போதம் என்பார்கள். அளவுக்கு அதிகமாகிவிட்டால், அதை அகம் பாவம், அகங்காரம் என்பார்கள். மிகவும் எளிமையாக அதை மண்டைக் கனம் என்றும் அடித்துச் சொல்வார்கள். மனிதர்களுக்குள்ளே மகா மாயையாக விளங்கும் இந்தத் தான் என்ற நினைவானது, தன்னைப் பெரிதாக உயர்த்தி எண்ணிக் கொண்டிருக்கும் போதே அடுத்தவர்களையும் அடி மட்டமாக எண்ணத் தூண்டும். அதிபயங்கரமாகப் பேசிப் பார்க்கும். கேவலமாகவும் ஏசியும் தீர்க்கும். - பிறரை மட்டந்தட்ட வேண்டும் என்ற மனோபாவம் மிகுந்திருப்பவர்கள்தான் மக்கள். மற்றவரை மதிக்கிறார்கள் என்றால் , அவர்களையும் மீறி, அவர்கள் செயல்களில் சிந்தையைச் சிறிது இழந்தவர்கள்தாம், புகழ்வார்கள் என்பதும், கண்கூடாக நாம் காணுகிற காட்சிதான். பொருள் கிடைக்கிறது. பதவி வருகிறது. அதிகாரம் சேர்கிறது. ஒருவரால் நன்மைகளும் வசதிகளும் கிடைக்கின்றன என்றால், அவரைக் கண்மூடித்தனமாகப் புகழ்வதற்குக் கற்றுக் கொண்டுள்ள கற்கால மக்கள் வாழ்கின்ற காலமல்லவா இது - ஆகவே, ஒருவரது சிறப்பை ஏற்கவோ போற்றவோ இதயம் இல்லாத மக்கள் வள்ளுவர் காலத்தும் வாழ்ந்தனர். இன்றும் வாழ்கின்றனர். - - ஆகவே, இத்தனை எதிர்ப்புகளையும் சிதறடித்துவிடுகிற நிலைமை எப்படி உண்டாகும்? எப்பொழுது உண்டாகும்.?