பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுககுப புதய பொருள் - 49 புகழோடு ஒருவர் விளங்கும்போது தான்! - - புகழ் எப்படி வரும் பணத்தாலா? பதவியாலா? அதிகாரத்தாலா? அல்ல. இவற்றால் வரும் புகழ் எச்சிலையானது, அடிக்கின்ற காற்றால் கோபுர உச்சியில் மாட்டித் தொங்கிக் கொண்டிருப்பது போலப் பிறகு, வீசுகிற காற்றிலே வீழ்ந்து அழிந்து போவது போல எதையாவது கொடுத்துப் பெறுகிற புகழ் ஈனத்தனமாகிவிடும். புகழ் என்றால், செயற்கரியனவற்றைச் செய்து முடித்த பெருமையால் - அறிவுப் பெருக்கத்தால், நிகழ்த்திய புதுமையால் - வீரச் செயல்களால் விளைத்த திறமையால் - ஞானத்தால் புதுப்பித்த அருமையால், நாடு காத்து, மொழி காத்து, மக்கள் குலம் காத்து என்பன போன்ற அருஞ்செயல்களால் ஏற்படுவனவாகும். - அப்படி வீரராக விவேகியாக, மெய்ஞ்ஞானியாக, மேன்மை மிகுபெரியராகச் சிறப்புள்ளவராக மிளிரவேண்டும். அப்படி உன்னைத் தகுதியுள்ளவராக, மாற்றிக் கொள்கிறபோதுதான், நீ செல்லும் இடமெல்லாம் உனக்குச் சிறப்பும் செழிப்பான வரவேற்பும் கிடைக்கும். * . அப்படி ஒரு தகுதியோ, தன்மை மிகு நிலைமையோ இல்லாத போது, நீ போனால் புணர்ணியமில்லை; பெருமையுமில்லை என்பதால்தான்,அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று பாடினார். புகழ் இல்லாத் வாழ்க்கை என்ன வாழ்க்கை? - - தமிழர்களின் குண நலம் பற்றிப் புறநானூற்றுப் பாடல் ஒன்று பாடுகிறது இப்படி. - . - புகழ் எனின் உயிரையும் தருவர் பழி எனின் உலகுடன் தரினும் கொள்ளலர். - புகழுடன் வாழும் பெருமையையே, பிறப்பில் பெற்ற பேறு என்ற தமிழர்தம் தனியான கொள்கையையே, வள்ளுவர் மிக எளிய சொற்களால், அதே சமயத்தில் உள்ளர்த்தம் நிறைந்த . சொற்களால்பாடி வைத்திருக்கிறார். - -