பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் எஸ் , நவராஜ் செல்லையா இப்பொழுது நாம் மீண்டும் குறளை ஒருமுறை படிப்போம். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று. - மனிதன் பிறக்கிறான்; இறக்கிறான் சூரியன் தினம் தினமஉதிக்கிறான். தினம் தினம் தோன்றி - மறைகிறான் அதுபோல சாதாரண மக்கள் வருவதையும் போவதையும் வந்தார்கள், வாழ்ந்து போனார்கள் என்று குறிப்பது இயற்கை. திறமையால் பெருமை பெற்றவர்கள் வருவதைத்தான் தோன்றினார்என்று கெளரவித்துக் கொண்டாடுவார்கள் மனிதர்கள். - - 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு' என்பது தமிழ்ப் பாடல். . . ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது, ஒவ்வொரு வகையான திறமையுடன்தான் பிறக்கின்றார்கள். தனது தகுதியைத் தெரிந்து கொண்டு, வளர்த்துக் கொள்பவர்கள், உயர்ந்தவராகின்றார்கள். தங்களைப் புரிந்து கொள்ளாமல், தான் தோன்றித்தனமாக வாழ்ந்து, உள்ளிருக்கும் திறமைகளை வளர்க்காமல் விட்டு விடுபவர்கள், வீணாக அழிந்து போகிறார்கள். - வந்தவர் கோடி, வாழ்ந்தவர் கோடி, எத்தனைபேர் வாழ்கிற மக்கள் மனதில் வாழ்கிறார்கள்? இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒவ்வொருவரும் முயல வேண்டும். தகுதியுடன் திகழ வேண்டும். மற்றவர்கள் புகழ்ந்திட வேண்டும். அப்படி ஒரு மணியான வாழ்க்கையை மக்களே நீங்கள் வாழ முயல வேண்டும் என்ற வேட்கையில்தான் வள்ளுவர் இந்தக் குறளைப் பாடியிருக்கிறார். - - - - * நாமும் இனி புகழுடன் தோன்றலாம் அல்லவா! | நம்புங்கள் முயலுங்கள். நிதமும் உழையுங்கள். நிச்சயம் நடக்கும். நினைத்ததைக் கொடுக்கும். -