பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 5 9. கல்லாரும் கற்றவரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் - கல்லார் அறிவி லார். (140) ஒழுக்கம் உடைமை என்று அதிகாரத்தில் வரும் பத்தாவது பாடல் இது. - - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல நூல்களையும் கற்றாராயினும், அறிவிலாதார் ஆவர் என்று பரிமேலழகரின் உரை விரிகிறது. - உலக மக்களோடு ஒன்றுபட்டு, நடந்து கொள்ள வேண்டியதைக் கற்றுக் கொள்ளாதவர்கள், பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், அறிவு இல்லாதவர்களே ஆவார்கள் என்று திருக்குறள் முனுசாமி விளக்கம் தருகிறார். - பலநூல்களைக் கற்றிருந்தபோதிலும், உலகத்தில் உயர்ந்த பெருமக்களோடு சார்ந்து ஒழுகும் முறையைக் கற்றுக் கொள்ளாதவர்கள், அறிவில்லாதவராகவே கருதப்படுவார்கள் என்று நாவலர் நெடுஞ்செழியன் கூறுகிறார். - உயர்ந்தாரோடு பொருந்தி உறவாடும் வாழ்க்கைக் கல்வியைக் கல்லாதவர், மற்றைப் பலப் பல கல்விகளைக் கற்றவரே எனினும், அறிவில்லாதவரே ஆவர் என்று மதுரை இளங்குமரனார் பொருள் கூறுகிறார். -

  • - எல்லாஉரையாசிரியர்களும், ஒத்தக் கருத்துடன்தான் உரை தந்தாலும், உலகம் என்பதைத் தான், சற்று அழுத்தமாக நினைக்காமல், சமத்காரமாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

உலகம் என்பதற்கு உலக மக்கள், உயர்ந் தோர், உலகவழக்கு என்பதாகப் பொருள் கண்டிருப்ப்து உண்மைதான். - * . - - உலக வாழ்க்கைக்கு முன் உதாரணமாகக் கொள்ள வேண்டியவர்கள் உயர்ந்தோர்கள் தாம் என்பதுதான் முக்கியப் பொருளாக இருக்கிறது. -