பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உயர்ந்தோர் என்பதற்குரிய பொருளைப் பார்க்கிற பொழுது, மற்றவர்களைவிட மேம்பட்டவர் என்றுநாம் கொள்ளலாம். - - - அன்பால் உயர்ந்தோர், பண்பால் உயர்ந்தோர்.அறிவால் உயர்ந்தோர், என்று பலவாறான நிலைகளிலும் நாம் பார்க்கலாம். - இவர்கள் எல்லோரையும்விட, பணத்தால்உயர்ந்தோராக இருக்கிறார்களே, அவர்களைத்தான் உலகம் போற்றுகிறது, புகழ்கிறது, பின் செல்கிறது, காலடி மண்ணை எடுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறது. - - - கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் என்று பணக்காரன் பெறுகிற பெருமையைப், பழம் பாடல் ஒன்று பாடுகிறது. பணம் இல்லாதவன், அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக இருந்தாலும், அவனிருக்கும் சமுதாய நிலை என்ன? அதற்கும் பதில் தருகின்ற பாடல் இதோ! " _ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி - - - இது விலைமாதருக்குரிய பாட்டாக இருக்கலாம். ஆனால், அது, காசுக்கு விலைபோகிற மக்களின் ஒட்டு மொத்தக் கருத்தாகவேதான் தொனிக்கிறது. - - - இன்றைய சமுதாயத்தில், சாராயம் விற்பவன் தான், சகல - வசதிகளுடன் வாழ்கிறான். சமுதாய அந்தஸ்து, அரசியல் தலைமை அறிவுலகில் அனைத்துப்பட்டங்கள். ஆய்வறிஞர் என்ற பட்டயம். அகில உலக மரியாதை எல்லாம் அமோகமாய்க் கிடைக்கிறது. - - - - இழிவான வழிகளில், வாழ்க்கைத் தரத்தில் மேலுக்கு வந்தவர்களை, நாம் உயர்ந்தோர் என்று ஏற்றுக் கொள்ளலாமா? அவரது வாழும் வாழ்க்கைமுறையைச் சார்ந்து கொள்ளலாமா! அதையே உலகத்தோடு ஒட்டி வாழ்வது என்ற உண்மை வாழ்வாகக் கொள்ளலாமா