பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* i குறளுக்குப் புதிய பொருள் - - 53 முடியாதென்றால் ? உலகம் என்பது உயர்ந்தோர் [9/5ئے என்னும் சொல்லில் சுழன்று கொண்டிருக்க முடியாது என்றே, எண்ணத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இன்றைய சமுதாய நிலை. அப்படியென்றால், உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும் என்பதை, உயர்ந்தோர்,சான்றோர் என்றுதான் அர்த்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைத்து ஆசிரியப் பெருமக்களும். அதற்கும் மேலே உள்ள அர்த்தத்தை ஏனோ அவர்கள் நினைவுக்குக் கொண்டு வரவில்லை. - - - - உலகம் என்தற்கு ஆகாயம், பூமி, நிலம், திசை, சிருஷ்டிப் பொருள்கள் என்றெல்லாம் அர்த்தங்கள் இருக்கின்றன. - பஞ்ச பூதங்களை உள்ளடக்கியதுதான் பூமியும் ஆகாயமும். ஆகாய வானத்திலிருந்து ஒளி, காற்று, நீர், எல்லாம் கிடைக்கிறது. பூமியிலிருந்து வாழ்வுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாமும் பெருமளவில் கிடைக்கின்றனவே! ஆகாயமும் பூமியும்தான் உண்மையான உலகம். நீடித்து நிலைத்து நிற்கும் உலகம். - - - இங்கு வந்து பிறக்கின்ற ஜீவராசிகள் எல்லாம் இருந்து ஒழிவனவே தவிர, எப்போதும் இருந்து வாழ்ந்திருக்கப் போவதில்லை. ஆகவே, நிலைமாறி, தடுமாறி, நிறம் மாறி, தரம் மாறிப் போகின்ற ஜீவன்களைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். ஆனால், அவற்றையே பின்பற்றி வாழ இயலுமோ? - - பிறகு எதனுடன் ஒட்டி வாழ வேண்டும்? யாருடன் ஒட்டி வாழவேண்டும். மனிதரை வாழவைத்துக் கொண்டிருக்கிற, மகா சக்திகளான காற்று, கனல், புனல், ஒளி, நிலம் இவற்றுடன்தான் ஒட்டி வாழவேண்டும்! அதெப்படி աապա என்று தைரியத்துடன் . கேட்பவர்களும் இருக்கின்றார்கள்! - - - . . . .