பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இணைந்தோராக வாழ்வோம் என்று ஒழுக்கமுடைமை என்ற பகுதியில், பாடிவைத்த வள்ளுவரைப் பாடிப்பரவுவதுடன் நின்றுவிடாது, இயற்கை வாழ்வு வாழ்வோம் என்று இன்றே, ஒர் உறுதியை மேற்கொள்வோமாக! 10.அவ்வுலகமும் இவ்வுலகமும் சிந்தனைக்கு உகந்த, அதே நேரத்தில் சிக்கல் மிகுந்த குழப்பம் நிறைந்த குறள் ஒன்றுக்குப் பொருள் காண முனைந் திருக்கிறோம். - - - - அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - - - (247) * உயிர்கள் மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பமில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகத்து இன்பமும் இல்லையாயினாற் போல என்று பரிமேலழகர் உரைகூறுகிறார். *பொருள் இல்லதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லை. யாகலைப்போல, உயிர்கள் மீது அருள் இல்லாதவர்களுக்குள் அந்த உலகப் பேரின்பம் இல்லையாகும் என்று திருக்குறளார் முனுசாமி, இதற்கான உரையைத் தொடர்கிறார். - * பொருள் இல்லாதவர்களுக்கு இ.வி வுலகவாழ்வு இல்லாதவாறு போல, அருள் இல்லாதவர்களுக்கு புகழ் உலகில் இடமும் பெருமையும் இல்லை என்று நாவலர் நெடுஞ்செழியன் உரை எழுதுகிறார். * - * பொருளில்லாதவர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவருக்கு உலகியல் பேறு இல்லை. அதுபோல, அருள் இல்லாதவர் புகழுலகில் புகுந்தாலும், அவர்களுக்குப் புகழ்ப் பேறு இல்லை என்று மதுரை இளங்குமரனார் உரை சொல்லுகி றார். இந்தப் பாடல் எளிதாகப் புரிகிறது என்பதால், விளக்கமும் வழக்கமாக, மன உணர்வுடன், பொருள் நினைவுடன் கூடிய வாழ்வியலைக் குறித்துக்காட்டுவதாகவே உரைகள் பிறந்திருக்கின்றன. . . . . .