பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 57 பொருள் இல்லையேல் இவ்வுலகத்து இன்பம் இல்லை இல்வுலகம் வாழ்வுப் பேறு இல்லை; இவ்வுலக வாழ்வில்லை என்று இயல்பான பொது அர்த்தமாகவே பொழியப் பட்டிருக்கிறது. - - - அருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் அதாவது காட்சிக்கும் கற்பனைக்கும் அப்பாற்கபட்ட உலகம். அந்த உலகத்து இன்பங்கள் இல்லை. - - - அதற்கு அருள் காரணமாகிறது என்கிறார்கள். இந்தக்குறளில் உள்ள பொருள், அருள். அவ்வுலகம் என்ற மூன்று சொற்கள்தாம், சிந்தனைக்குரியவை; சிக்கல் மிகுந்தவை. சிலிர்த் தெழச் செய்பவையாக உள்ளன. - பொருள் என்றால் பணம், செல்வம் என்றுதான் எல்லோரும் பொருள் கண்டிருக்கின்றனர்; கொண்டிருக் கின்றனர். - - பொருள் என்றால் உடல் என்று ஒரு அர்த்தம் உள்ளது என்பதை, எல்லோரும் பொருட்படுத்தாதுவிட்டுவிட்டார்கள். பொருள் என்றால் பொன். பொன் என்றால் உடம்பு. نواع என்றால் பொருள். பொன் இப்படி அர்த்தங்கள் உண்டு. பொருள் இருந்தால்தான் இவ்வுலக வாழ்க்கை, இன்பவாழ்க்கை உண்டு, என்று நாம் ஒரு வாதத்திற்காக ஒத்துக் கொண்டாலும், பொருள் இருக்கின்றவர்கள் எல்லோரும், இன்பத்திலேயா திளைக்கின்றார்கள்? - பொருளுடையவர்கள் எல்லாம் இன்பத்தில் திளைப்பவர்கள்போல நடிக்கின்றார்கள். எல்லாருக்கும் முன்னே நடக்கின்றார்கள். அவர்கள் படும் பாடு நாய்படுமா? பொருள்இல்லாத ஏழைமக்கள் வாழ்க்கையில். எத்தனை எத்தனை மகிழ்ச்சிகள் இயல்பாக இருக்கின்றன. - பசி நேரத்தில் அவர்கள் படும்பாடு கொடியதுதான் என்றாலும், பசி தீர்ந்தபிறகு, அவர்களின் பேச்சும் மூச்சும் பேரின்ப நிலையில் அல்லவா நிலைநிறுத்தி வைக்கிறது.