பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என்னும் நூலை எழுதும் போதும், வள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர், எந்தக் கடவுளை வணங்கினார் என்ற ஆய்வு நோக்குடன் வள்ளுவர் வணங்கிய கடவுள் என்னும் புத்தகத்தை எழுதும் போதும் திருக்குறளைத் திரும்பத் திரும்பப் படிக்க நேர்ந்தது. பல சொற்பொழிவுக் கூட்டங்களுக்குச் சென்றபோது சொற்பொழிவாளர்கள் திருக்குறளுக்குச்சொன்ன விளக்கங்கள் மிகச் சாதாரணமாக இருந்தன என்பதும் எனக்கு புரிய வந்தது. இவ்வளவு சாதாரண எளியக் கருத்துக்களைச். சொல்வதற்குத் தெய்வமாப் புலவர் திருவள்ளுவர் எதற்கு, என்று என் உள்ளத்திலே ஒரு உறுத்தலான கேள்வி எழுந்தது. அப்பொழுது என் கேள்விக்கு விடையாக ஒரு கவிதை கிடைத்தது. வல்லமையால் சொல்லுக்குள் சொல்லை வைத்தே வள்ளுவனும் மர்மத்தின் மர்மம் சொன்னான்' என்னும் அந்த இரண்டு வரிகளும் என் இதயக்கடலைக் குழப்பி விட்டன. 'கற்க கசடற என்னும் குறளானது எப்படி கற்க வேண்டும் என்று சொல்வதைத் தவிர எதைக் கற்க வேண்டும் என்பதைச் சொல்லவில்லை என்று எல்லோரும் பொருள் சொன்னார்கள். ஆனால் வள்ளுவரே 'க' என்ற சொல்லுக்கு உடல், வியாதி , எமன், காமன், இயற்கைப் பஞ்ச பூதங்கள் என்றெல்லாம். பொருள் இருப்பதால் இயற்கையை பயன்படுதுவதற்காக கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். நோய் இல்லாமல் வளமுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுக்குள்ளே சொல்லை வைத்த அந்த மாமேதையின் திறம் வியந்து மனமகிழ்ந்து பாராட்டினேன். அதுபோல மழித்தலும் நீட்டலும் வேண்டா என்னும் போலித் துறவிகளிள் பொய் வேடத்தைப் படம் பிடித்துக் காட்டினார் வள்ளுவர். மழித்தல் என்ற சொல்லுக்கு மொட்டை அடித்துக் கொள்ளுதல் என்றும், நீட்டல் என்ற சொல்லுக்கு நீண்ட முடி, தாடி வளர்த்தல் என்றும், எல்லா உரை ஆசிரியர்களும் பொருள்