பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆகவே, வள்ளுவர் சொல்லவந்த பொருள் இங்கே பணமல்ல. உடல் பற்றித்தான். - உடல் அதாவது வலிமையான உடல், வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சந்திக்கின்றன. வல்லமையுள்ள உடல் எந்த நேரத்திலும் இயற்கையான இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு, ஏற்றம் பெற வைக்கின்றது. இத்தகைய உடல் இல்லாதவர்ககு உலக வாழ்க்கை இல்லை என்று சொல்லாமல், இவ்வுலகமே இல்லை என்றல்லவாவள்ளுவப் பெருங்கவிஞர்பாடுகின்றார். - -- எனக்குத் தெரிந்த, ஏன், எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் - பெருங்கோடீசுவரர். அவருக்கு ஆள், அம்பு, அரண்மனை வாசம், ஆசைப்பட்டது அத்தனையும் பெறக்கூடிய சகவாசம் இருந்தது. ஆனால், சிந்தனையிலே ஒரு நொடிகூட மகிழ்ச்சி இல்லை. . - - காரணம் அவர்நோயால், பெருநோயால் அவதிப்பட்டார். அவருக்கு உடமையாக இருந்த சொத்தும் செல்வமும் என்ன இன்பத்தைத் தந்தது! பொருள் வாழ்க்கைக்குத் தேவை. ஆனால் பொருளே வாழ்க்கையாகி விடாது. - அதற்கு மாறாக இப்படி எண்ணிப் பாருங்கள். உடலே வாழ்க்கை. உடலின்றி வாழ்க்கை இல்லை. உலகமே இல்லை. இருந்தும் இறந்தவராகிவிடுவார்கள் அல்லவா! அதனால்தான் பொருள் என்கிற உடல் இல்லாதவர்களுக்கு இவ்வுலகமே இல்லை. உடல் என்பது உயிரின் உடை. ஆவியின் உடை. ஆத்மாவின் உடை. இந்த உலக வாழ்க்கையை உற்சாகமாக உணர வைக்கின்ற உயிராகிய ஆத்மாவிற்கு உதவுகின்ற காப்பு. ஆமாம். பாதுகாப்பு. - - - பொற்காப்பு - - அடுத்த வரியானது அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. அருள் என்றால் அனைத்துயிர்களிடத்திலும் இரக்கம் என்றும், அவ்வுலகம் என்றால் வீட்டுலகம்,