பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 59 விண்ணுலகம், இறந்த பிறகு பெறுகிற புகழ், உலகம் என்றும் பொருள் கூறி நம்மை மயக்கி விட்டார்கள். - ஆகவே நாம் அருள் என்றால் என்ன? அவ்வுலகம் என்றால் என்ன? என்பதற்குரிய நுண்ணிய அர்த்தங் களைப் பார்ப்போம். - - அருள் என்கிற சொல்லுக்குப் பிங்கல நிகண்டு தருகிற, பலபொருள்களை முதலில் பார்ப்போம். தகவும் கருணையும் இரக்கமும் தயவும் கிருபையும் அபயமும் கிளர் அருளாகும். (1772) கருணை, இரக்கம், தயவு, கிருபை, அபயம் என்னும் சொற்கள், அனைத்துக்கும் நமக்குப் பொருள் புரியும். 'தக்கார் தகவு இலார் என்பது அவரவர்தம் எச்சத்தால் காணப்படும் என்று மக்களைப் பிரித்துக் காட்ட வள்ளுவர் பாடினாரே, அந்தத் தகவு என்ற சொல்லுக்குரிய பொருளைப் பார்ப்போம். - - இத்தகைய அரியகுணங்கள் கொண்டவர்களைத்தான் அருளாளர் என்கிறோம். அப்படி என்றால் அவ்வுலகம் என்பது எது? மேலுலகமா? வீடு என்று பேசப்படும் மோட்சலோகமா? கண்ணுக்குத் தெரியாத, கற்பனைக்கும் எட்டாத, செத்த பிறகு சேரப்போகிற இடம் என்று சொல்லப்படுகிற அவ்வுலகம் என்றால், அதில் பெறப் போகிற பெருமையும் புகழும் யாருக்குத் தெரியும்? இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருளாகிய உடல் வேண்டும். உடலும், உடலில் உருவாகும் ஒப்பற்ற குணங்களும் பெருமை பெற, அவ்வுலகில் இடம் வேண்டும். அவ்வுவகம் என்றால் என்ன? - - - - -- - - அவ் என்ற சொல்லுக்கு அவை என்று அர்த்தம். அைெlெ என்றால்,கலைஅரங்கு நாடக அரங்கு, கூட்டம், - சபை, புலவர் என்று அர்த்தம். -