பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் تقـ - - ஒதல் பொருதல் உலகுபுரத்தல் ஈதல் , வேட்டல், படைபயிறுதல் - (பிங்கல நிகண்டு 767) அரசனது நிலை, பகைவர்களைப் பொருது, மக்களைக் காத்து, ஈந்து, உதவுவது என்பன போன்ற தொழில்கள். இங்கே வள்ளுவர் கூறுவது உலகு இயற்றியான் என்பதால், உலகமாகிய சான்றோர்கள், என்கிறஉயர்ந்தோர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே விதிகளாக அமைகின்றன. - அரசனுக்கு உதவுவதற்காகப் பதினெட்டு வகை தொழில் செய்பவர்கள் உண்டு. - - . 1. ஐம்பெருங்குழு 2. எண்வகைத் துணைவர் 3. ஐவகை உறுதிச் சுற்றம் (மொத்தம் 18) - 1. ஐம்பெருங்குழு: - - - மந்திரியார், புரோகிதர், சேனாபதியர், தந்திரத்துதர், சரணர் என்றிவர அந்தமில் அரசர்க்கு ஐம்பெருங்குழுவே (பிங். 769) 2. எண்வகைத் தலைவர்:கரணத்து இயல் வோரும் கருமதிக்காரரும், அகன்ற சுற்றமும், கடைகாப் பாளரும், நகர மாக்களும்; நனிபடைத் தலைவரும் இவளி மறவரும் யானை வீரரும் அரசர்க்கு எண்பெரும் துணைவராகும். - (பிங் 770) பொருள் ; கரணத்து இயல்வோர்: திருமண காரியங்கள் செய்வோர் கரும அதிகாரம் :ஈமக்காரியம் செய்வோர். இவுளி மறவர்.குதிரை வீரர் 3. ஐவகை உறுதிச் சுற்றம்: அடுத்தநட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலாளர், மருத்துவக் கலைஞர் நிமித்திகப் புலவர், நீணிய வேந்தர்க்கு உரைத்த ஐம் பேர் உறுதிச் சுற்றும் (பிங்.771) இத்தகைய பதினெட்டு வகைத் தொழில் செய்பவர்கள், o