பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 12. பொருள் பொதிந்த பொருள் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள் - - மெய்ப்பொருள் காண்ப தறிவு - - (423) அருமையான குறள் ஒன்றைப் பற்றி இங்கே பொருள் காண வந்திருக்கிறோம். - எல்லோருக்கும் தெரிந்த குறள் புரிந்த குறள்: எதற்கெடுத்தாலும் உதாரணமாகக் கூறப்படுகின்ற ஒரு குறள். காலங்காலமாகக் கவனத்தை ஈர்த்து கருத்தைக் கொடுத்து, க்டமையைக் கற்றுக் தருகின்ற குறள். - * . இதற்குள்ளே என்ன புதிய பொருள் என்று கேட்பதில் கூட சிலருக்குப் பொறுமை இல்லை. நேரிலே நான் பலரிடம் இதைப் பற்றிப் பேசியபோது நெருப்பைத் தொட்டதுபோல, நெருஞ்சில் முற்களின் மீது காலை வைத்தது போல, வெடுக்கேனத்துடித்தது கண்டு, நானே வெகுண்டு போனேன்; விலகி வந்தேன். என்னதான் புதிய பொருள் என்று புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம், அவர்களுக்கு உள்ளே எழுந்த பதட்டத்தால் பட்டாசு போல வெடித்துச் சிதறியது. - புகழ் பெற்ற உரையாசிரியர்கள் கூறிய பொருளைக் காணலாம். - யாதொரு பொருளை யாவர்யாவர் சொல்லக் கேட்டாலும் அப்பொருளை மெய் யாய்ப் பயனைக் காணவல்லது அறிவாகும். (பரிமேலழகர்) - - எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் சொல்லக் கேட்டாலும் அப் பொருளினுடைய வல்லமையுள்ளது அறிவாகும். (i. முனுசாமி) - - யாரொருவர் எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும் அதன் உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடைன்ம யாகும். (நாவலர் நெடுஞ்செழியன்)