பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 67 ஆக, எல்லோரும் ஒரே மாதிரியான பொருளைத்தான் உரைத்திருக்கின்றனர். இதில் மாறுபாடும் இல்லை. வேறுபாடும் இல்லை. - " - 40வது அதிகாரம்:கற்பதற்குரிய நூல்களைக் கற்றல் என்பதான தலைப்பு - கல்வி. 41 வது அதிகாரம்: கல்லாதிருத்தலின் கழிபெரும் தன்மைகளைக் கட்டவிழ்த்துக் காட்டும் தலைப்பு-கல்லாமை. 42 வது அதிதாரம்: தக்கவற்றைக் கேட்டறிதல் என்றுவிளக்குகின்ற தலைப்பு-கேள்வி. - 43 வது அதிகாரம்: அறிவுடையாராதல் என்று வழிகாட்டுகிற அறிவுடைமை என்னும் தலைப்பு. அறிவுடைமை என்னும் தலைப்பில் வருகிற 3வது குறள் அதாவது கல்வி கேள்விகளினாய அறிவொடு உண்மை உறிவு உடையனாதல் என்பதாகத்தான்பரிமேலழகர் அதிகாரம் பற்றிய அருமையான விளக்கம் ஒன்றையும் தந்திருக்கிறார். - இந்தக் குறளில் மூன்றுமுறை பொருள் என்று சொல் பொழியப்பட்டிருக்கிறது. 1. எப்பொருள் - எந்தப் பொருள் 2.அப்பொருள் - அந்தப் பொருள் 3.மெய்ப்பொருள்- உண்மைப் பொருள் - பொருள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்றே அர்த்தம் கூறியிருக்கின்றனர். - - - 1. எண்பொருள் 2. நுண் பொருள் என்றும் உண்டு. பொருள் என்றதும் நமது மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது பணம்தான். - - - - - இப்படியெல்லாம் நினைப்பார்கள் என்று தெரிந்துதான் பொருள் என்றால் கல்விப்பொருள் என்றும் செல்வப்பொருள் என்றும் பிரித்துக் கூறிச்சென்றனர்.முன்னோர். செல்வப்பொருள்