பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அந்த யார் யார் என்பதற்கு, இழிந்தோர் உயர்ந்தோர் பகைவர் என்று வகைப்படுத்திக் கூறுவார்கள் அறிஞர்கள். இழிந்தோர் கூறும் இழிகுணங்கள், உயர்ந்தோர் கூறும் அறிவுரைகள், பகைவர் பேசும் வஞ்சகக் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், ஒருவரை நிச்சயம் மனத்தால் தாக்கும் ; உடலால் அழிக்கும். - கேட்பது, சிந்திப்பது, தெளிவது, ஒழுகுவது எல்லாம் வாழ்க்கைக்காக என்றாலும், வாழ்க்கை என்பது உடலை வைத்துத்தானே அமைகிறது. சமைகிறது! மெய்ப்பொருளாகிய உடலுக்கு நன்மை பயக்கின்ற நுண்பொருளைக் காண்பதுதான் அறிவு. உடலைப் புறம் தள்ளிவிட்டு வாழ்ந்தவர் எல்லாம் அற்பாயுளில் அழிந்தொழிந்தனர்.மெய்பொருளின் மேன்மை கண்டவர்களோ நெடுங்காலம் வாழ்ந்தனர். புகழால் உயர்ந்தனர். - - - உடலைப்பற்றிய அறிவே உன்மையான அறிவு. உடலைப் பற்றிய ஞானமே மெய்ஞ்ஞானம். - எவர் எது சொன்னாலும், கேட்பது உங்கள் கடமை. அக் கருத்துக்கள் உங்கள் உடலைக் கெடுக்காத வண்ணம் தற்தாத்துக் கொள்வது சிறப்பான தன்மை. அதுதான் அறிவுடைமை. - ஆக, நாம் காணுகின்ற புதிய பொருள் இதுதான். இழிந்தோர். உயர்ந்தோர், பகைவர் ஆகிய மனித இனத்தினர் கூறுகின்ற கருத்துக்களில் உங்களைக் காத்துக் கொள்ள, மெய்ப்பொருளாக விளங்குகின்ற உடலினைப் பாதிக்காத வண்ணம் வளர்த்துக் கொள்ள அறிந்துகொண்டு பின்பற்றுகிற தன்மையே அறிவுடைமையாகும். - இங்கே மெய்ப் பொருள் என்பது உண்மையான உடல் ஆகும். அதன் உள்ளும் புறமும் அறிந்து தெளிந்து அறிவுடையோராக நீங்கள் வாழ்க வாழ்ந்து வளர்க என்பது வள்ளுவரின் வழிகாட்டும் வாக்காக வந்திருக்கிறது.

  • - மெய்ப் பொருளை ஏற்று, போற்றி வாழ்வோமாக.