பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா அறிந்து செய்வான். அஃதறிந்து செய்யாதவன் உயிருடையனேயாயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும். பரிமேலழகர். பரிமேலழகரைப் பின்பற்றி அப்படியே எழுதுகிறார். திருக்குறள் வீ. முனுசாமி. உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன், செத்தவர்களுள் ஒருவனாகக் கருதப்படுவான். - ஒப்புரவு உடையவன் உயிர் வாழ்பவனாகவும் அஃதில்லாதவன் உயிருடன் இருந்தும் இறந்தவள் ஒருவனாகவும் எப்போதும் கருதப்படுவான். நாவலர் நெடுஞ்செழியன் - பொது நலன் கருதி வாழ் புவனே உயிர் வாழ்பவன். அவனல்லாத பிறன் இறந்தவருள் ஒருவானாகக் கருதப்படுவன். . . - - மதுரை இளங்குமரனார். உரைகள் பலற்றைப் படித்தீர்கள். இதற்குமேல் உரை. எழுத என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.உண்மைதான். . . . . ஒப்புரவு என்றால் உலக நடை, வேதநடைபோல அறநூல்கள்கூறியவற்றிற்கும் மேலாக, தாமே அறிந்து செய்யும் தன்மை என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிறார். - உலக நடை என்பது, உலக மக்களது பழக்க வழக்கங்கள். வேதநடை என்பது மதக் கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறை. அறநூல்கள் என்பது நல்ல நெறி காட்டும் பண்பு முறை. அதற்கும் மேலே தாமாக அறிந்து செய்யும் தன்மை, தகைமை தான் ஒப்புரவு என்கிறார் பரிமேலழகர். அப்படி என்றால் ஒப்புரவு என்றால் என்ன பொருள்? ஒப்பு என்றால், அழகு, இசைவு, உடன்பாடு, சம்மதம் - பொருந்துதல் என்று பல அர்த்தங்கள். - o