பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் . . . . 15 - ஆகவேதான் நோயில்லாமல் வாழ்வதுதான் சிறப்/ புடைமை என்று சொல்லாமல் சொல்லலாம். நல்ல தேகம் உள்ளவன்தான் நான்கு பேர்களுடன் சமரசமாக, சமாதானமாக இருக்க முடியும். ஒத்துப் ப்ோய் உறவாட முடியும். அன்புகாட்டிஆறுதலாக வாழ்விக்க முடியும். - . நோயாளி ஒருவன் தானும் புலம்புவான். அடுத்தவரையும் ஆட்டுவிப்பான். அலைக்கழிப்பான். துயரப்படுத்துவான். தூற்றித் தொலைப்பான். கஷ்டங்களைக் கொடுப்பான். - - தன் துன்பத்தை மற்றவர்கள் மேல் சுமத்த முயல்வான். பிறர் சந்தோஷத்தை அவர்களால் ஒத்துக் கொள்ள முடியாததே காரணம். - - - - - - - ஆகவேதான், சத்துக் குறைந்து போய், செத்தவர்களாகத் திரிவார்கள். இயற்கையைப் புரிந்து கொள்ளுங்கள். தேகத்திற்கு ஒத்ததை எல்லாம் தெரிந்து கொண்டு தீர்மானமான திட நெஞ்சத்துடன் தினம் நடவுங்கள். ஒத்தது அறிந்தால் உயிர்ப்புநிறையும். உயிர்ப்பு உரமான உடலைத் தரும். உடல் வாழ்வாங்கு வாழவைக்கும். - அதனால்தான் சித்தம் போல் அலைந்து செத்துத் திரியாதே என்று பெரியவர்கள் போதிக்கின்றார்கள். நமக்கு ஒத்தது எது? உணவுப் பழக்கம், உடை பழக்கம், உழைப்புப் பழக்கம். உடலுறவுப் பழக்கம், உறங்கும் பழக்கம் இவையெல்லாம் உடலுக்கு எந்த அளவுக்கு ஒத்தது என்று அறிந்து கொண்டால், வாழ்கிற காலம் வரை வளம்தானே சேரும். - - - அப்படிப்பட்ட வாழ்வுக்கு அன்பாக அழைத்து, அறிவுறுத்தும் அருமையான குறள் அல்லவா இது - * ஒத்ததுடன் உயர் வாழ்வு வாழுங்கள்.