பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று விரிவாக அறிகிற போது, வள்ளுவரின் வார்த்தைச் சித்து வேலைகளைப் புரிந்து கொண்டு வானளாவிய இன்பத்தை, அல்லவா பருகி மகிழ முடிகிறது! - - 1. அடக்கம் 2. அமரருள் 3. உய்க்கும் 4. அடங்காமை 5.ஆரிருள் 6. உய்த்து 7 விடும். - இனி ஒவ்வொன்றுக்குமான பொருளைக் கூறி விடுகிறேன். பிறகு பொருத்திப் பார்க்கலாம். - - 1. அடக்கம்: அடங்கிய காரியம்; கீழ் ப்படிதல்; மன - அமைதி, பணி ஒழுக்கம்; இச்சையடக்கம். - 2. அமரருள்: என்னும் சொல்லை, நான் இரண்டு சொற்களாகப் பிரித்துப் பார்க்கிறேன். . . . ஒன்று அமரர்+உள்=அமரருள் இன்னொன்று அமர்+அருள்-அமரருள் அமரருள் என்றதுமே, தேவருலகம்,மேலுலகம், தெய்வங்கள் வாழுகின்ற திருத்தலம் என்றெல்லாம் உரை. எழுதினார்கள், அதையே உலகநீதி. உலக வழக்கு என்று சமாதானமாகச் சொன்னார்கள். - அமரர் என்றதும், தேவர் என்றும், பகைவர் என்றும், பொருள் உண்டு. மக்கள் மனத்திலே நீக்கமற நிறைந்து அமர்ந்திருப்பவர் பிடித்து அமர்ந்திருக்கின்ற புகழ் பெற்ற மனிதர்களையே அமரர் என்று பெருமையாகப் பேசுவார்கள். அப்படிப்பட்ட அமரர்கள் நடுவிலே அடக்கமானவர் அமர்ந்து கொள்ளும் அரிய பேற்றினைப் பெறுவார் என்பது ஒரு அர்த்தம். - - அமரர் என்றால் தேவர் என்பார்கள். தேவர் என்பதற்குத் தெய்வம் என்று தான் அர்த்தம் என்பதாக அதையே வலியுறுத்தி விளக்குவோர் அதிகம். தேவர் என்றால் சான்றோர், அரசர், துறவியர், புலவர் என்று அர்த்தம். - . இன்னும் வாயு, சூரியன், வருணன், யமன், அக் கினி ar -- -