பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போன்ற ஐம்பூதங்களுக்கு அதிபதிகளாகிய தேவர்களையும் இந்தச் சொல் மேலும் விளக்கிச் செல்கிறது. - அமரர்களாக வாழ்கின்ற சான்றோர்கள், மக்களை ஆண்டு அரவணைத்துக் காக்கின்ற அரசர்கள், அறம் காக்கும் துறவியர்கள், புலமைத்திறம் வாய்ந்த புலவர்கள் மத்தியிலே வீற்றிருக்கின்ற பெருமையை அளிக்கும். அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் என்பது புறநானூற்றுப் பாடல் வரிகள். - - அறிவு என்பது, உள்ளும் புறமும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் தன்ம்ை. அந்தத் தன்மை அடக்கத்தின் மூலமாக வளரும். அருவியாக விழும். ஆற்றல் மிகு சக்தியாக எழும். இங்கே தேவர் என்றதும் , வாயு வருகிறது. தீ எரிகிறது. மழை பொழிகிறது. ஆமாம், அர்த்தம் கொடுத்துத்தான். ஒருவர் உடலின் உள்ளிருந்து கொண்டு ஆட்சி செய்வது காற்று, வெப்பம், நீர் - - இந்த மூன்றும் கட்டுக்குள் அடங்கியிருந்தால் உடல் கட்டாக இருக்கும். - கற்கண்டாக இனிக்கும். காட்சியில் தெளிவும் பொலிவும் கொண்டு விளங்கும். - - - இந்த மூன்றும் அடக்கப்படாவிட்டால் உடலுக்குக் காய்ச்சல், குளிர்ந்தால் ஜன்னி, வாயு மிகுந்தால் வாய்வு, குறைந்தால் வாட்டம், தொடரும் வியாதிகள். தொந்தரவுகள் படையாகத் துரத்தும். இதனால்தான் அடக்கம் என்றார். - இயற்கைக்குக் கீழ்ப்படிந்து, அடங்கிய காரியங்களை ஆற்றுதல். அப்படிப்பட்ட பணிகளில் பண்பான ஒழுக்கம். பசியெடுத்துத்திரிகின்ற புலன்களின் இச்சையடக்கம். - இப்படி வாழ்கின்ற அடக்கம்தான் பெரியவர்கள் மத்தியிலே மேடையிட்டு அமரச்செய்யும் மேன்மையை அளிக்கிறது. -