பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - டாக்டர் எஸ் நவராஜ் செல்லைய, இயற்கையாக வாழும் முறைகளுக்குக் கட்டுப்படாமல் நீதிநெறி வழிகளுக்கு அடங்காமல் மனம் போன போக்கில் வாழ்கின்ற அடங்காமையானது பூமியில் வாழ்கின்ற காலத்தே அறியாமையை நிரப்பி அஞ்ஞானத்தை விளைத்து, மன மயக்கத்தை ஏற்படுத்தி ஒளியற்ற இருட்டு வழியில் செலுத்திவிடும். - - - - - விடும் என்றால் சொல் விடுதல் என்ற பொருளில் வருகிறது. விடும் என்பது விட்டுவிடும். அதாவது மீண்டும் திரும்பி வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டிவிடும். ஒதுக்கி விடும். விரட்டிவிடும். வீழ்த்தி விடும். - அப்படிப்பட்ட சூழ்நிலை இருள் வாழ்வு எப்படி ஏற்படும்? - - உண்மைதானே. உடல் நலம் பெற, வளம் பெற பலம் பெற ஒழுக்கமான கட்டுப்பாடானவாழ்க்கை முறை கட்டாயம் தேவை. ஒழுக்கம் தவறினால் உடலுக்கு அழுக்கு நிறைகிறது. அதனால் இழுக்கு ஏற்படுகிறது. இழுக்கு வழுக்கல் பாறையைப் போல சறுக்கி விடுகிறது. அதனால் நோய்கள் கூட்டம், நொடிப் பொழுதில் பிடித்து குதிரையேறிக் கொள்கிறது. கொல்கிறது. . . . . . - - வாழ்க்கையில் நோய் வரலாம். துன்பம் வரலாம்.நிம்மதி குறையலாம். - - - அது இயற்கை மனித வாழ்வின் மாறாத இயற்கைதான். ஆனால், வாழ்க்கையே நோய்க்கு ஆளானால் துன்பத்தின் தோணியாகி விட்டால் கஷடங்களின் கேணியாகிவிட்டால் எப்படி ஒளி ஏற்படும்? இருள்தானே மிஞ்சி நிற்கும். - அப்படிப்பட்ட இருள் அவர்கள் பூமியில் வாழுகிற நாள்வரை புற்றீசல் போல் புறப்பட்டு பறந்து கொண்டுதான் இருக்கும். - ஒருமுறை நோயால் உடல் நொந்து போனால் நலிந்து