பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 15. மண்கலமும் நன்கலமும் மங்கலம் என் ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (60) - வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில் வருகிற பத்தாவது குறள் இது. - இங்கே வருகிற பொருள் சிக்கல், மங்கலம் என்பதற்கும், நன்கலம் என்பதற்கும் ஒத்து வராமைதான் என்றார்.அவ்ர். இருந்தாலும், அறிவுடை பெரியோர்கள் ஆக்கி வைத்துவிட்டுப் போன, அரும் பொருளுரைகளை முதலில் காண்போம், என்று தேடிப் படித்தேன். மனையாளது நற் குண நற்செய்கைகளை ஒருவற்கு நன்மையென்று சொல்லுவர். நல்ல புதல் வரைப் பெறுதல், அவை தனக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் அறிந்தோர் என்கிறார் பரிமேலழகர். - - - - - மனைவியினுடைய நற்குண நற்செய்கைகளை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன் மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர் என்று விளக்குகிறார் வீ.முனுசாமி. இல் வாழ்க்கைக்கு மங்கலம் மனைவியின் நல்லொழுக்கமேயாகும் என்று பெரியோர் கூறுவர். அதற்கு நல்ல அணிகலன் நல்ல மக்களைப் பெறுதலேயாகும் என்று கூறுவர் என்கிறார் நாவலர் நெடுஞ்செழியன். மனையாளின் பெருமையே ஒருவன் வாழ்வில் எந்நாளும் திருமணவிழாப் போன்றது என்பர். அவ் வாழ்வில் பெறும் நல்ல மக்கட்பேறு நல்ல அணிகலம் போன்றது என்பர் என்று மதுரை இளங்குமரனார் கூறுகின்றார். இந்தக்குறள் வாழ்க்கைத்துணைநலம் என்ற அதிகாரத்தில் வருகிறது என்று கூறினோம். . . . .