பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - - 83 வாழ்க்கைத்துணைநலம் என்று கூறியவுடன், மனைவி, இல்லாள், துணைவி, குடும்பத் தலைவி என்று உடனே பொருள் கூறி உண்மை நில்ையை சற்றே மாற்றி மறைத்து விட்டனர். - - வாழ்க்கைத்துணை என்றால் மனைவிதான் துணையா? கணவன் துணையாக மாட்டாரா? கற்பு என்று சொன்னால் தலைவிக்கு மட்டும்தான் கற்பா? தலைவனுக்கு வேண்டாமா? - துணைஎன்ற சொல்லுக்கு மனைவி என்பது, பல அர்த்தங்களில் ஒன்று. கணவன் என்றும் ஒர் அர்த்தம் உண்டு. - அதற்கும் மேலாக உதவி, ஆதரவு இணை, ஒப்பு இரட்டை என்று பல அர்த்தங்கள் உண்டு. வாழ்க்கைக்கு உதவியாக, ஆதரவாக, இணையாக, ஒப்பாக, மனைவி மட்டுமா இருக்க வேண்டும்? கணவனுக்குப் பொறுப்பே கிடையாதா? இப்படி பொறுப்பே இல்லையென்று பேசி விடுவார்கள் என்று எணர்ணித்தான், வள்ளுவரும் மிக எச்சரிக்கையாக மனைமாட்சி என்ற ஒரு சொல்லை பக்குவமாகப் பெய்துவிட்டார். - - - மனை என்றால் மனைவி என்றும். மாட்சி என்றால் பெருமை என்றும் உரை கூறி விடுவார்கள் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும் போலும். உரையும் அப்படித்தான் அமைந்து . விட்டது. - - - - உரிய பொருளை உண்மை நிலையை அப்புறமாகப் பார்ப்போம். - மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கள் பேறு - - என்ற ஏழு சொற்களில் மங்கலம் என்ற சொல் இங்கே ஏன் வந்தது. என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராக இருந்தது. இருக்கிறது. புதிருக்குப்பதிலாக இருந்தது. இருக்கிறது. புதிருக்குப் பதிலாகப் பலர் மங்கலம் என்ற - - - சொல்லுக்குரிய அர்த்தத்தை, திருமணம் என்றனர். பொலி என்றனர். தர்மம் என்றனர். -