பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 87 தவறிப்போனால் சமாளித்துக் கொள்ளலாம். மீண்டும் அதுபோல ஒரு பாத்திரத்தை உருவாக்கிக் கொள்ள்லாம் என்று நினைக்கக் கூடாது. அப்படிநினைத்தாலும் முடியவே முடியாது என்பதை வலியுறுத்தத்தான் வள்ளுவர் மனையின் மாட்சியை ஒருமண் கலத்திற்கு ஒப்பிட்டார். நன்மக்களையும் நன்கலத்திற்கு ஏன் ஒப்பிட்டார் என்றால், குடும்ப கெளரவத்தைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுவது போலவே, குலக்கொழுந்துகளையும் கண்ணும் கருத்துமாய்ப் பொருத்தமாய்க் காத்து வர வேண்டும். மண்கலம் என்னதான் நன்கலமாய் இருந்தாலும் உடைந்தால் ஒட்டாது. என்னதான் கெளரவமான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் கொஞ்சம் தவறிப் போனால் ஒழுக்கத்தில் தடுமாறிப் போனால் மீண்டும் சரியாக உருவாக சந்தர்ப்பமே வாய்க்காது. - அதனால்தான் பேறு என்று ஒரு சொல்லைப் போட்டார். பேறு என்றால் வாய்ப்பு என்பது பொருள். நன்கலம் ஒருமுறைதான் முழுமையுடன் இருக்கும். காக்கின்றவரைதான் உதவுகிற வாய்ப்புடன் இருக்கும். அதனால் ஆண்பெண் இருவரின் பொறுப்பை வலியுறுத்த வந்த வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலத்தை மண்கலத்திற்கும் வழிவழி வந்து வாழ்கிற குழந்தைச் செல்வங்களை நன்கலத்திற்கும் ஒப்பிட்டு உண்மையை விளக்கினார். வெற்றிகரமாக மட்டுமல்ல, ஒழுக்கமாகவும் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை வள்ளுவர் எவ்வளவு அழகாக இந்தக் குறளில் பாடியிருக்கிறார் பார்த்தீர்களா? .