பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 89 இவர் நடுவுநிலைமை உடையர், இவர் நடுவுநிலைமை இலர் எனும் விசேடம் அவரவருடைய நன்மக்களது. உண்மையானும் இன்மையானும் காணப்படும் என்கிறார் பரிமேலழகர் - நடுவுநிலைமையுடன் இருப்பவர் நடுவுநிலைமை அற்றவர் என்னும் உண்மையினை அவரவர்களுக்கு உண்டாகும் அதாவது அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் நன்மை தீமைகளால் தெரிந்து கொள்ளப்படும் என்கிறார் வி.முனுசாமி. - -- ஒருவர் நடுவுநிலைமை உடையவர் என்பதும். நடுவுநிலைமை இல்லாதவர் என்பதும் முறையே அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் கண்டறியக் கூடும், நாவலர் நெடுஞ்செழியன். - - இவர் நடுவுநிலமையாளர், இவர் நடுவுநிலைமை அற்றவர் என்பது ஒவ்வொருவரும் இவ்வுவகில் வாழ்ந்தபோது வைத்துச் சென்ற (மக்கள், புகழ், பழிபொருள்) வற்றால் தெரியவரும். மதுரை இளங்குமரனார். - மேலே கூறப்பட்ட உரைகளில் நடுவுநிலமையாளர்-அது அற்றவர் என்ற இரு சொற்களுக்கும் எந்தவித மாற்றமுமின்றி உரை வந்திருக்கிறது. ‘. . . எச்சம் என்ற சொல் வரும்போதுதான் மாற்றங்கள் தலை தூக்கியிருக்கின்றன. - இந்தக் குறள் நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் வருகிறது. - . . பகை, நொதுமல், நண்பென்னும் மூன்று பகுதியிலும், அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை என்று இதற்கு அர்த்தம் கூறியிருக்கிறார் பரிமேலழகர் - - பகைவரிடத்தும் பற்றற்றவரிடத்தும், பாசமுள்ள வரிடத்தும், நீதிநெறி தவறாது நிற்பதே நடுவுநிலைமை ஆகிறது. * , . . . . . . . . . . . . .