பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 . . . டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா வாழ்கிறபோதே ஒருவரை வாழ்த்த வேண்டும்? வாழ்த்துவதற்குரிய தகுதியைப் பார்க்க வேண்டும். இது மக்களின் கடமை. - - . . . - வாழ்கிறபோதே தகுதியால் வாழ்ந்து காட்ட வேண்டும். மக்கள் மனதிலே தனது புகழை நடவேண்டும். மக்களின் மனத்திலும் அவர்கள் காட்டுகின்ற புறச் செயல்களிலும் அவரைப் பற்றிய புகழ் விளங்க வேண்டும். இது தனிப்பட்ட மனிதனின் கடமை. மக்களில் மூன்று பிரிவினர் உண்டு. புனிதன், மனிதன், கினிதன். தக்காராக வாழ்கிறவர் மனிதரிலிருந்து மேம்பட்டுப் புனிதராகிறார். தகவிலராக வாழ் கிறவர் மனிதரிலிருந்து கீழிறங்கி கினிதராகிறார்; பீடை பிடித்தவன் என்று அர்த்தம். ஒருவரைக் தக்கார் தகவிலார் என்று கணக்கிட, அவர் செய்கிற காரியங்களில் இருக்கும் உண்மை, இருக்கும் குறை இவற்றை வைத்துத்தான் அறிய முடியும், ஒருவர் பேசுகிற உண்மையும், செய்கிற நன்மையும் உயர்ந்தவராகவும், செய்கிற தீமையும் பேசுகிற பொய்மையும் தகவில்லாதவராகவும் ஆக்குகிற தன்மையைத் தான் வள்ளுவர் செப்பமுறச் சொல்லிச் செல்கிறார். : சமுதாயத்தின் நீதி நியாய நெறிகளெல்லாம் ஆட்சியாளர் களால் நிந்தனைப்பட்டு, புது நிபந்தனைக்குள்ளாகிப் போய் விடும் என்பதை உணர்ந்த தீர்க்கத்தரிசி வள்ளுவர்.அதனால்தான் சமுதாய நீதியைச் சொல்லாமல் தனிமனித நீதியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எச்சத்தின் நன்மை தீமையின் மிச்சம் பார்த்தே (மிகுதி) ஒருவரை உணர்ந்து கொள்ள முடியும். + . . . நடு என்ற சொல்லுக்கு நீதி, செம்மை, தொழில் என்று அர்த்தம். நடு என்ற சொல்லிலிருந்து தான் நடை என்ற சொல் வந்தது.நடை என்றால் நடத்தை என்றும், பயணம் என்றும், -