பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 93 ஒழுக்கம் என்றும் பொருள். * . வாழ்க்கை நடைமுறையில் வாழ்கிற பயணத்தில் உண்மையாகவே, நீதிமானாகக் ஒழுகுகிற ஒழுக்கம் உடையவர், புத்தரைப் போல் ஏசுவைப் போல், மக்கள் மத்தியிலே புகழ்பெற்றார்கள். - - தகாத செயல்களைச் செய்தவர்கள், தாங்கள் வாழ்கிற காலத்திலேயே தகாதவர்களாக, தகவிலர்களாக ஆகி, புறம் தள்ளப்பட்டு போய் ஒழிந்தார்கள். - - -

  • . ஆகவே, பெற்ற மக்களைப் பார்த்து மனிதர்களைப் பார்ப்பது சரியான நடுவுநிலைமை ஆகாது. ஒருவர் போய் சேர்ந்த பிறகு ஆராய்ந்து அவர் எப்படிப்பட்டவர் என்று கண்டு பிடிப்பது வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்துவராது.

இருக்கும்போதே ஒருவர் செய்துவந்த காரியங்களை வைத்தே சிறப்புச் செய்வதும், வாழ்த்துவதும்தான் நடுவுநிலைமையாளர்களின் சிறப்பான கடமையாக இருக்கிறது என்பதுதான் இக்குறளில் புதிய பொருள்.