பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 17. புண்ணும் வடுவும் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே. நாவினால் சுட்ட வடு (129) அடக்கம் உடமை என்ற அதிகாரத்தில் வருகிற ஒன்பதாவது குறள். மிக எளிமையாக, அர்த்தம் புரிந்து, ஆனந்தப்படச் செய்கின்ற ஓர் அருமையான குறள். ஒருவனை ஒருவன் தீயினால் சுட்டபுண், மெய்க்கண் கிடப்பினும், மனத்தின் கண் அப்பொழுதே ஆறும். அவ்வாறன்றி, வெவ்வுரையுடைய நாவினால் சுட்டுவடு, அதன் கண்ணும் எஞ்ஞாறும் ஆறாது பரிமேலழகர். . தீயினால் சுட்ட புண்ணினால் ஏற்பட்டதுன்பம், மனத்தை விட்டு நீங்கிவிடும். ஆனால் கடுஞ் சொல்லால் ஏற்பட்ட மனப்புண், ஒரு போதும் நீங்காது. நாவலர் நெடுஞ்செழியன். கொள்ளியால் ஒருவன்சுட்டபுண். வெளியே ஆறுவதுடன் உள்ளும் ஒருநாள் ஆறிப்போகும். ஆனால், நா என்னும் கொள்ளியால் சுட்ட புண்ணோ என்றும் மாறாத் தழும்பாக மாறிவிடும் - மதுரை இளங்குமரனார். அடக்கம் உடமை என்ற அதிகாரத்தில், மன அடக்கம், மெய் அடக்கம், மொழி அடக்கம் என்று மூன்றின் முக்கியத் துவம் பற்றி விளக்குகிறார் வள்ளுவர். - - - - - மெய்யாகிய உடலின் வெளிப்பாடு, செயலாகி வருகிறது. மனத்தின் வெளிப்பாடு முகத்தின் பாவமாகி வெளியாகிறது. உடலின்துடிப்பும், மனத்தின் கொதிப்பும்தான், சொல் வடிவாக வெளிவருகிறது. - தீயினால் சுடப்படுகிறபோது புண் ஆகிறது. புண் என்பது. உடல் தோலில் உண்டாகும் ஊறு ஆகும். புண்ணாகி விடுகின்ற காயத்தை, உடலியலார் 4 வகையாகப் பிரித்துக் கூறுவார்கள். வெட்டுக்காயம், - சிராய்ப்புக் காயம், ஊமைக் காயம், குத்துக்காயம். இவற்றிக்கும் மேலான கொடுமை கொண்டதுதான் தீக்காயம். - - * .