பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. உயிரையும் தருவர்

சின்னக் குழந்தை ஒன்று கையில் ஒரு மிட்டாயை வைத்துச் சுவைத்துக்கொண்டு நிற்கின்றது. மிட்டாய் வாங்கித் தின்னக்கூடிய சத்தி அற்ற அடுத்த வீட்டுக் குழந்தை ஒன்று இக்குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே நிற்கின்றது. இவ்வாறு மற்றக் குழந்தைகள் தம்மைக் காண்பதைக் கண்டவுடன், சில குழந்தைகள் பழிப்புக் காட்டிவிட்டு வீட்டினுள்ளே ஓடி மறைந்துவிடும் ஆனால், ஒரு சில குழந்தைகள் இவ்வியல்புக்கு முற்றிலும் மாறாக நடந்துகொள்வதையும் காணமுடியும்.

பரிதாபத்தோடு தன்னைப் பார்க்கும் குழந்தையை, மிட்டாய் தின்னும் குழந்தை மிக்க பரிவோடு கவனிக் கின்றது; தன்னை யாராவது கவனிக்கின்றார்களா என்பதைச் சுற்றும்முற்றும் ஒரு முறை கவனிக்கின்றது. உடனே அக்குழந்தையும் அஞ்சிக்கொண்டே வருகிறது. உடனே தான் தின்றுகொண்டிருக்கும் எச்சில் மிட்டாயில் பாதியைக் கடித்துக் கொடுத்து ஒடிப் போகுமாறு கூறுகிறது, தின்று கொண்டிருக்கும் குழந்தை!

தின்ற எச்சில் மிட்டாயில் பாதியைக் கடித்துக் கொடுப்பது ஒரு பெரிய காரியமா என்றுகூடச் சிலர் நினைக்கலாம். உண்மையை ஆராயுமிடத்து, இச் செயல் மிகமிகப் பெரிய காரியம் என்றே கூறவேண்டும். க்ை