பக்கம்:குறள் நானூறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவன்மை ஒரு நலம். அந்நலமே நல்ல உடைமை யாம் செல்வம் என்று நூல்கள் கூறும். அந்த நாவன் மையால் விளையும் நலம் வேறு எந்த நலத்துள்ளும் உள்ளது ஆன்று. 2 f {

சொல்வன்மை என்பது தன் பேச்சைக் கேட் டாரை வயப்படுத்தும் தகுதியை அவாவிக் கேளாத வரும் ஆர்வததோடு கேட்க விரும்புமாறு சொல்லப் படுவதாகும். 212

மாற்ருனிடம் தன் சொல்லை வெல்லும் சொல் இல்லாததை அறிய வேண்டும், அறிந்து ஆத்தகைய திறனுள்ள சொல்லைச் சொல்ல வேண்டும். 2 #3

சொல்லுகின்ற கருத்திற்கேற்ற சொற்களை ஒழுங்கு படுத்திக் கேட்போருக்கு நயமாகச் சொல்லும் வல்ல மையைப் பெறவேண்டும். பெற்ருல் அவன் இடும் ஏவலே உலகத்தவரே விரைந்து கேட்டுச் செய்வர். 214

நூல்களைக் கற்றவர் தாம் கற்றதை மற்றவர் உணரும் வகையில் விரித்துரைக்கும் வன்மையைப் பெறுதல் வேண்டும். பெருதவர் அரும்புக்கொத்து மலர்ந்தும் மணக்காத மலர் போன்று பயனற்றவர் ஆவார். 2 I 5

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/100&oldid=555597" இலிருந்து மீள்விக்கப்பட்டது