பக்கம்:குறள் நானூறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவற்றையும் சூழ்ந்து ஆராய்ந்து எடுத்த செயல் முடிவடைவதற்கு மனத்துணிவு வேண்டும். அத்துணி வோடு விரைந்து செயலாற்றவேண்டும். காலங்கடத் தித் தேங்கியிருத்தல் தோல்வியைத் தரும். 236

வினைசெயல் ஐந்து வகைகளோடு அமைவதாகும். அவை, வினைக்குப்பயன்படும் பொருள், பொருத்தமான கருவி, தக்க காலம், செயல் திறன், செய்யும் இடம் என்னும் ஐந்துமாம். இவற்றை மயக்கத்திற்கு இடமில்லாமல் எண்ணி எண்ணிப் பார்த்துச் செய்தல் வேண்டும். 227

மதநீரால் நனைந்த கன்னத்தை உடைய சிறந்த யானையால் யானையைப் பி டி த் து க் கட்டுவர். அதுபோன்று செய்யும் ஒரு செயலைக்கொண்டே மற்ருெரு செயலையும் நிறைவேற்றிக் கொள்ளுதல் வேண்டும். - 228

ஆட்சி நலம் கருதித் தூது செல்பவன் நுண்ணறிவு, கவர்ச்சியான தோற்றம், உளநூலை ஆராய்ந்த கல்வி, ஆகிய இம்மூன்றிலும் நிறைந்த தகுதி உடையவனாக அமைய வேண்டும். அத்தகையவனே தூது செல்லும் வினையை மேற்கொள்வாளுக! 223

தூதுச் செய்தியாகச் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லி, பயன் தராதவற்றை நீக்கிக் கேட்போர் மகிழ்வோடு கேட்குமாறு சொல்லி நாட்டுக்கு நன்மையை விளைவிப்பதே தூது ஆகும். 230

94.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/106&oldid=555603" இலிருந்து மீள்விக்கப்பட்டது