பக்கம்:குறள் நானூறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்ப்படை போர்க்களத்தில் கலங்காததாய் எதிரிகளது கீழறுப்புச் செயல்களுக்கும் ஆட்படாதது. இவ்வல்லமையோடு விடாது தொடர்ந்து வரும் அஞ்சா மையைக் கொண்டதுவே படை. - 另每盘

ஆற்றலுள்ள படை எத்தகையது என்ருல் கூற்று வனே சினத்தால் கொதித்துத் தன்மேல் படையெடுத்து வந்தாலும் அஞ்சாமல், ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதாகும். 252

முயலாம் எளிய விலங்கை எய்து கொன்ற அம்பை விட வலி யானையைக் குறிவைத்துக் குறிதவறிய வேலைக் கையில் ஏந்துதல் பெருமைக்குரியதாம். அது போன்று எளிய நாட்டைத் தாக்கிப் பெறும் வெற் றியைவிட வலிய நாட்டைத் தாக்கிப் பெறும் தோல்வி ஒரு படைக்குப் பெருமையாகும். 25盏

போர்க்களத்தில் மேம்பட்ட வீரனை எதிர்க்கும் வீரத்தைச் சிறந்த ஆண்தன்மை என்று சொல்லுவர். அந்த ஆண்தன்மைக்கு ஓர் எஃகுக் கூர்மை உண்டு. அது, தான் எதிர்த்த வீரனுக்குக் களத்தில் ஓர் இடை யூறு நேருமாளுல் அவனுக்கு உதவி செய்தல் ஆகும். 254

தன்னைக் காத்துப் பயிற்சி தந்து வீரளுக்கிவிட்ட தலைவனது கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழியு மாறு போரிட்டுச் சாகவேண்டும். அத்தகைய சாக்காடு பெருமையுடையது. அந்தச் சாக்காட்டை மிக இழிந்த தொழிலாகிய இரத்தலேச் செய்தேனும் பெற் றுக் கொள்ளலாம். . . . 255

40Ꮞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/116&oldid=555613" இலிருந்து மீள்விக்கப்பட்டது