பக்கம்:குறள் நானூறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. நட்பு

நட்பே காவல்

செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல்

வினைக்கரிய யாஉள காப்பு? 781—256

நட்பு ஒரு நூல்

புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும். . 785-258

நட்பு நயக்கும் கை நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. 783–257

நட்பு ஓர் உணர்ச்சி உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. 788–259

நட்பின் செம்மாப்பு நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. $ 89–26()

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/119&oldid=555616" இலிருந்து மீள்விக்கப்பட்டது