பக்கம்:குறள் நானூறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர் ஆனவர் வேட்கையால் நீரைப் பருகுபவர் போன்று அன்புடன் ஆர்வம் காட்டிலுைம் பண்புள்ளவ ராகவும் அமையவேண்டும். பண்பில்லாத நண்பரது நட்பு வளர்வதை விடக் குன்றுதல் நன்மையைத் தரும், 28 &

செல்வம் உற்றபோது நட்புக்கொண்டு செல்வம் அற்றபோது நீங்கிவிடுபவர் உள்ளம் ஒத்த நட்பில்லாத வர். அவர் நட்பு எதற்கு? அதைக்கொள்வதாலும் நன்மை இல்லை; இழப்பதாலும் தீமை இல்லை. 267

பரத்தையர் உள்ளன்பு இல்லாமல் பொருளைப் பெறும் நோக்குடனேயே தொடர்பு கொள்பவர். கள்வர் களவாகப் பொருளைக் கொள்பவர். என்ன பயன் கிடைக்கும் என்று கணக்குப் பார்த்துப் பழகும் நண்பர் பரத்தையரும் கள்வரும் போன்றவரே ஆவர். 268

சொல்வேறு செயல்வேறுபட்டவர் நட்பு துன்ப மானது. அந்நட்பு கனவிலும் துன்பத்தைத் தரும் தீய நட்பு. 269

இல்லத்தில் இருக்கும்போது மிக நெருக்கமாகப் பழகிப் பாராட்டிப் பேசி, பலர் கூடிய பொதுமன்றில் பழித்துப் பேசுவோர் நட்டை விடுக! எந்த வகையிலும் மீண்டும் அணுக விடாமல் அவர் நட்ப்ை நீக்கிப் பாது காத்துக் கொள்க! 27 ()

1 It)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/122&oldid=555619" இலிருந்து மீள்விக்கப்பட்டது