பக்கம்:குறள் நானூறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமலர்ச்சியால் இனிமையாக மகிழ்வைத் தந்து, மனத்தில் துன்பம் செய்யும் எண்ணங் கொண்டவர் நண்பராகார்; வஞ்சகர். அவர் நட்பு கூடா நட்பு. 27.1

கூடா நட்பினர் உள்ளம் பொருந்திய நண்பர் போன்று நல்லவற்றைச் சொல்லுவர். சொல்லினும் உள்ளம் பொருந்தாத அவரது சொல்லின் பொய்மை விரைவில் உணரப்படும் அளவில் வெளிப்படும். 272

வில் வணங்குவது போன்று வளைவது தீங்கின் அறி குறியாகும். அதஞல், அதுபோன்ற பகைவரது பணி வான சொல்லைக் கொண்டு நண்பராகத் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தொடர்பு கூடா நட்பா கும். ' 373

குவித்துத் தொழுத கைக்குள் கொல்லும் படை

மறைக்கப்பட்டிருக்கலாம். அதுபோன்றே, பகைவர் அழுது வடிக்கும் கண்ணிரும் நம்மை அழிக்கும்

எண்ணத்தை மறைத்துக்கொண்டு வருவதாகும். எனவே அக்கண்ணிரைக் கொண்டு நண்பர் என நம்பக் கூடாது. . 274

பகைவரும் பயன்கருதி நண்பராக முன்வருவர். அந்நிலையில் உடன் ஒதுக்கிவிடாமல் அது கூடா நட்பு என்று உணர்ந்து முகத்தளவில் நட்புக் காட்டவேண்டும். உள்ளத்தளவில் நட்பைப் பொருத்தாமல் நீக்கிவிட வேண்டும். - 275

  • ,

I l 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/124&oldid=555621" இலிருந்து மீள்விக்கப்பட்டது