பக்கம்:குறள் நானூறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவருடனும் முரண்படுவது இகல் அந்த இகல் மிக இனிமையானது என்று கொள்பவரது வாழ்க்கை தவறுதலும், அடியோடு கெட்டுப் போதலும் மிக அண்மைக்காலத்தில் நிகழக் கூடியனவாம். 28 1

தன்னைவிட வலியவர் தன்ளுேடு மாறுபட்டுப் பகை கொண்டு தாக்குங்கால் அப்பகையை ஏற்றுக்கொள்ளு தலைப் பாதுகாப்போடு செய்க! தன் நட்பைப் போற்ருத மெலியவர்மேல் தானே பகைகொண்டு மேவுகi இவை இரண்டும் பகைகொளலின் மாண்பு. 282

தன்னைச் சேர்ந்து வாழ்ந்து தனக்குப் பெருமை தராதவற்றைச் செய்பவன் பகைவன். அவன் விரும்பத் தக்கவன் ஆகான். அவன் மேல் பகை கொள்ளல் நன்று. எவ்வளவு பொருள் கொடுத்தாவது அப்பகையைக் கொள்ளலாம். 283

தன்னைத் தாக்கும் பகைவனது திறன் தெரிந்து அவனையும் நண்பனுகக் கொள்ளுதல் பெருந்தன்மை யான பண்பு. அப்பண்பை உடையவர் ஒரு தனித் தகுதியுள்ளவர். அத்தகுதியின் கீழ் இவ்வுலகமே அடிமையாய்த் தங்கும். 284 முள்ளுள்ள மரத்தை முளைத்து வரும் செடி அளவி லேயே சீவித் தள்ள வேண்டும். அதுபோன்று, பகை வரின் தீய திறனறிந்து தொடக்கத்திலேயே தாக்கி அழித்துவிடவேண்டும். முள்மரம் முற்றினல் வெட்டு பவர் கையைக் கொல்லும். அதுபோன்று, பகையை முற்றவிட்டால் அழிவைத் தரும். £85

I 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/128&oldid=555625" இலிருந்து மீள்விக்கப்பட்டது