பக்கம்:குறள் நானூறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈன்றெடுத்த தாய் தன் சேய் தவறு செய்தாலும் வெறுப்புக் கொள்ளாள். தன் சேய் கள் குடித்ததைக் காணின் அவள் முகத்திலும் துன்பக் குறியான வெறுப்புத் தோன்றும். தாயே வெறுப்பின் கள் குடித்த வனக் காணின் சான்ருேர் முகத்தில் எத்தகைய துன்ப வெறுப்புத் தோன்றும்? 296

"ஒரு முறைகூட யான் கள் குடித்ததில்லை'என்று வாயால் சொல்லுவதையும் விடுக! வாய்ச்சொல் லாக வருவதற்குரிய எண்ணம் ஆர்வமாகப் பெருகிக் கள்ளக் குடிக்கச் செய்துவிடும் 397

நீருக்குள் மூழ்கி மறைந்திருப்பவனே எரியும் விளக் கைக்கொண்டு தேடிக் காண முடியாது, அது போன்றே, கள் குடித்து மயங்கி இருப்பவனேக் கார ணங்கள் காட்டித் தெளிவு பெறச் செய்ய முடி யாது. 密 398 இரை கிடைத்தது என்று கருதி மீன், தூண்டில் முள்ளை விழுங்கி அழியும். அதுபோன்றே, வெற்றி கிடைப்பதாயினும் சூதாட்டம் வெற்றி ஆர்வத்தை மூட்டி அழித்துவிடும் என்பதை உணர்ந்து கைவிட வேண்டும். 299

சூதாட்டம் தம் கைப்பொருளை அழிக்கும்; பொயயை மேற்கொள்ளச் செய்யும்; அருளைக் கெடுக் கும்; துன்பத்தில் ஆழ்த்தும். எனவே, சூதை விரும் பாது விடுக! 300

1 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/134&oldid=555631" இலிருந்து மீள்விக்கப்பட்டது