பக்கம்:குறள் நானூறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் பெருகும் காலத்தில் எவருக்கும் பணிந்து நடத்தல் வேண்டும். செல்வம் மிகச் சுருங்கி வறுமை நேர்ந்த காலத்தில் தன்மானத்தை விடாமல் பெருமை யைக் காப்பாற்ற வேண்டும். 306

தலையில் இருக்கும்போது போற்றிப் பேணப்படும் தலைமயிர் தலையிலிருந்து விழுந்தால் குப்பையென்று தள்ளப்படும். தன் நிலையிலிருந்து தாழ்ந்து மானம் இழந்தவர் அந்த மயிர் போன்று உமிழப்படுவார். 307

ஒருவன் தன்னை மதிக்காதவன் பின்னே தன் மானத்தை இழந்து உயிர் வாழ்வது மிக இழிவு. அதை விட "மானமிழந்த அந்த நிலை வந்த உடனேயே இறந்தான்" என்று கூறப்படுதல் சிறந்தது. 30 &

மாந்தருக்கு மானமே பெருந்தகுதி. அப்பெருந் தகுதியினது பெருமை கெடும் நிலை வந்தபோது இறத் தலே மேல். அதன்பின்னும் இவ்வுடம்பைக் காத்து வாழ்வது உயிர் அழியாமைக்கு மருந்து ஆகுமோ? ஆகாது. - - 303

தன்மானத்திற்குச் சிறிது தாழ்வு வந்தாலும் வாழாது இறப்பவனே பெருமை உடையவன். அவனது தன்மானப் புகழை உலகத்து நல்லோர் போற்றுவர்.

- - - - 3 : 0

夏器6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/138&oldid=555635" இலிருந்து மீள்விக்கப்பட்டது