பக்கம்:குறள் நானூறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்து எழுத்துக்கள் எல்லாம் அ என்னும் ஒலியை முதலாகக்கொண்டு ஒலிக்கின்றன. அது போன்று, உலகம் முழு முதல் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது. -தொடர் எண் 1

நினைப்பவர் மனம் என்னும் மலர்மேல் சென்று அமர்பவன் இறைவன். அவனை ஆழ்ந்து நினைப்பவர் உலகியல் வாழ்வில் நீண்ட காலம் வாழ்வர். 3

இறைவன் தனக்கு உவமை இல்லாதவன். அவனை நினைப்பவர்க்கு மனக்கவலை இல்லை. மற்றவர் மனக் கவலையை மாற்ற முடியாது. $'

மழை பெய்வதால் உலகம், உயிர்களுக்கு வாழ்வை வழங்கி வருகின்றது. வாழ்வைத் தருவதால் மழையை அமிழ்தமாகக் கருத வேண்டும், ベ 4.

மழைநீர் இன்றி உலகம் அமையாது. எனவே, எவர்க்கும் மழை இல்லாமல் தொடர்ந்த நடப்பு இல்லை. - 莎

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/14&oldid=555511" இலிருந்து மீள்விக்கப்பட்டது