பக்கம்:குறள் நானூறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகைத் தொழில்களால் உலகம் சுழன்று இயங்குகின்றது. ஆயினும், உழவுத் தொழிலை அடிப் படையாகக் கொண்டே உலக வாழ்வு அமைகின்றது அதனல், எத்துணை வருந்தி உழைப்பதானுலும் உழவுத் தொழிலே சிறந்த தொழிலாகும். 3.26

உழுது புரட்டிய ஒரு பலம் மண், கால் பலம் ஆகும்படி கதிரவன் ஒளியால் காய வேண்டும். அவ்வாறு காய்ந்தால், ஒரு பிடி எருவும் வேண்டாமல் மிகுதியாக விளையும், 327

நிலத்துக்கு உரிமையுடைவன் நாள்தோறும் வயல் நிலத்திற்குச் சென்று கண்காணிக்கவேண்டும், செல் லாது சோம்பி இருப்பானைல் தன்பால் அன்பு காட்டாத மனைவி ஊடல்கொண்டு இன்பம் தர மறுப் பதுபோல் நிலமென்னும் வளமான பெண்ணும் வெறுப்புகொண்டு நல்ல பயன் நல்காது விடுவாள். 328

உண்ணக் கிடைக்காமையால் வளரும் ஆசையே வறுமை எனப்படும் அது தன் குடிப்பெருமையைக் கெடுக்கும்; உடல் அழகையும் கெடுக்கும். 3 # 9

கொடிய நெருப்புக்குள் உறங்க முடியாது. அதற்குள் உறங்க நோந்தாலும் உறங்கிவிடலாம். ஆனல், வறுமையில் எந்தச் சிறு அளவிலும் கண் மூடுதலும் முடியாது. வறுமை நெருப்பினும் கொடிது. 330

J & 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/146&oldid=555643" இலிருந்து மீள்விக்கப்பட்டது