பக்கம்:குறள் நானூறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமற்ற கீழ் மக்கள் கயவர் எனப்படுவர். அவர் உடல் உறுப்புக்களால் மக்களைப் போன்றே இருப்பர். ஆனால், அவர் போன்று ஒப்புக் கூறத்தக்க மாந்தரை உலகில் யாம் (திருவள்ளுவர்) பார்த்தது இல்லை. 336 கயவர் தாம் அச்சங் கொள்ளும் அளவில் தம்மை விட வலியவரைக் கண்டால் அஞ்சி அடங்குவர். தமக்கு அடங்கிக் கீழ்ப்படியும் எளியவரைக் கண்டால் அவரினும் மேம்பட்டுத் திமிருடன் நடந்து கொள்வர்.

337

கயவர்களிடம் நல்ல ஒழுக்கச் செயல்கள் இல்லை. ஏதேனும் இருக்குமானல், அதற்குக் காரணம் அச்சமே. அச்சமன்றி வேறு ஒன்று உண்டு என்ருல், அது, ஏதும் கிடைக்கும் என்ற அவா உண்டாவதால் சிறிதளவு உண்டாகும். 338

பறை என்னும் தம்பட்டம் தன்னை மறைவிடத்தில் தட்டினலும் ஊருக்கெல்லாம் ஒலிபரப்பிச் செய்தியை வெளிப்படுத்தும். கயவர் தாம் கேட்ட மறைவான செய்திகளே அதற்குத் தொடர்பு இல்லாதவரிடம் உரைப்பர். தாமே வலியப் போய் உரைப்பர். இதல்ை கயவர் தம்பட்டம் போன்றவரே ஆவர். 339

கயவர் தம் கன்னத்தைக் குத்தி உடைக்கின்ற முட்டியை உயர்த்தியவருக்கு எப்பொருளையும் கொடுத்துவிடுவர். மற்றவர்க்குத் தாம் உணவை உண்டு கழுவிய ஈரக் கையையும் உதற மாட்டார். 340

1 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/150&oldid=555647" இலிருந்து மீள்விக்கப்பட்டது