பக்கம்:குறள் நானூறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தன் பெறும் உடல் இன்பங்கள் ஐந்து வகையின. அவை, கண்டு களித்தல், கேட்டு உவத்தல், உண்டு சுவைத்தல், மோந்து மகிழ்தல், உணர்ந்து பூரித்தல் என்பன. ஐந்து அறிவால் விளையும் இவ்வைந்து இன்பங்களும் ஒளி வீசும் வளையலே அணிந்த என் காதலியிடம் ஒருங்கே உள்ளன. 346

தன்மேல் உள்ளத்தைப் பதித்த காதலியின் மெல்லிய தோள்களைத் தழுவியவாறே துயில்கொள்ளு வது போன்ற இன்பம் வேறு ஒன்றும் இல்லை. தாமரை போன்ற கண்ணையுடைய கண்ணன் பல பெண்களுடன் இன்பங் கண்டதாகக் கூறப்படும் அந்தக் கண்ணன் உலகிலும் உண்டோ? என்பேன். 347

என் காதலியிடம் ஒரு நெருப்பு உளது. அந்நெருப்பு வியப்பானது. அது அவளைவிட்டு நீங்கிளுல் சுட்டுத் தாக்குகின்றது. அவளே நெருங்க 'தண் என்று குளிர்ச் சியைத் தருகின்றது. இப்படியொரு வியப்பான நெருப்பை எங்கிருந்து பெற்ருளோஅறியேன். 348

ஆ! அம்மம்ம! என் காதலி தழுவிய இன்பத்தை என்னென்பேன். தமக்குரிய இல்லத்தில் இருந்து, தாம் ஈட்டிய பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்து உண்டால் உண்டாகும் இன்பம் போன்று உள்ளது என்று கூறலாம். $49

நூலறிவையும் பட்டறிவையும் புதிதாகப் பெறும் போதெல்லாம் அவற்றை முன்னர்ப் பெரு திருந்த அறியாமை புலப்படும். அது போன்றதே என் காதலி தரும் இன்பமும், ஒவ்வொரு முறை தழுவும் போதும் இப்படியொரு இன்பத்தை இதற்குமுன் பெற்றதில்லையே என்று எண்ணும் புதுமை புதுமையாக உள்ளது. 350

144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/156&oldid=555653" இலிருந்து மீள்விக்கப்பட்டது