பக்கம்:குறள் நானூறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணில் விண்மீன்கள் நிலையின்றி அங்கங்கு திரிந்து கொண்டுள்ளன. இதற்குக் காரணம் எனக்குப் புலப்படுகின்றது. நிலவையும் என் காதலி முகத்தை யும் கண்ட விண்மீன்கள் இரண்டிற்கும் வேறுபாடு அறிய முடியாமல் கலங்கியே இவ்வாறு நிலையின்றித் திரிகின்றன என்பேன். 35

உட்ம்போடு உயிருக்கு எவ்வகையில் ஒன்றிய தொடர்பு உண்டு? அதுபோன்று, என் காதலியோடு எனக்குள்ள காதல் உணர்வு பொருந்தி ஒன்றியுள்ளது. அவள் உடல் என்ருல் என் காதல் உயிர் எனலாம். 35.2 என் கண்ணின் கருமனியில் உள்ள பாவையே! நீ கருமணியில் இருக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது. இனி இவ்விடத்தைவிட்டுப் போய்விடு. என் உள்ளத் தைக் கொள்ளைகொண்ட அழகிய நெற்றியை உடைய என் காதலிதான் இனி என் பார்வையைத் தரும் பாவை. அவளை இங்கு வைத்து ஒளிபெறவேண்டும். இவ்விடமன்றி இப்பாவைக்கு வேறு இடம் இல்லை. 353 என் காதலர் என் கண்ணுக்குள் உள்ளார். இக்கண்களுக்கு மை தீட்-வேண்டுமாயின் இமைகளை மூட வேண்டும். மூடும்போது அவர் கண்ணுக்குள் ஒளிந்துகொண்டு காட்சி தரமாட்டார். அதனல் கண்ணுக்கு மை தீட்ட மாட்டேன். 354 யான் சூடான உணவை உண்ண மாட்டேன். ஏனெனில், என் காதலர் என் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார். சூடான உணவு இந் நெஞ்சுவழியே செல்லும்போது அவரைச் சுட்டு வெந்து போகச் செய்யும். இதனை அறிந்துகொண்டேன். எனவே, சூடான உணவை உண்ணமாட்டேன். 355

I46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/158&oldid=555655" இலிருந்து மீள்விக்கப்பட்டது