பக்கம்:குறள் நானூறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதவியர் தாம் விரும்பிய காதலரைத் தம்மை அதே அளவில் விரும்புகின்றவராகிப் பெறவேண்டும். அவ்வாறு பெற்றவர் காமத்தைக் கனியாகப் பெற்றவர் ஆவார். கனியிலும் முற்றிய விதையில்லாத கனியைப் பெற்றவராய்த் தடையின்றிச் சுவைப்பர். 366

தோளில் சுமக்கும் காவடியின் ஒரு தலைப்பில் சுமை கூடுதலாக அமைந்தால் சுமக்க இயலாது; சுமைப் பொருளும் விழும். சுமை இரு தலைப்பிலும் சம மாக அமைந்தால் சுமத்தல் இனிது காமம் காவடி போன்றது. காதல் கொண்டோர் இருவரும் சமமாக அன்பைப் பதிக்க வேண்டும். அந்நிலையில்தான் காதல் இனிமையாகும். ஒரு பக்கம் மட்டும் அன்பு பெருகு மாளுல் காமம் துன்பமேயாகிவிடும், $67

எனக்கு வரும் தும்மல் என் காதலர் என்ன நினைப்பதன் அறிகுறியாகும். இதுபோது தும்மல் உள்ளி ருந்து வெளியே வருவது போன்று வராமல் மறைகின் றது. அவர் இந்நேரம் என்னே நினைப்பவர் போன்று நினையாமல் விடுத்தார் போலும். 盏台&

என் காதலர் நனவில் வந்து காதல் இன்பத்தை வழங்காதுபோளுர். இதனுல் என் உயிர் போயிருக்க வேண்டும் அவ்ரைக் கனவில் கண்டு இன்பம் பெறுவ தால்தான் எனது உயிர் போகாது இருக்கின்றது. 369

யான் துயில்கொள்ளும்போது கனவில் என் காதலர் என்னைத் தழுவியவாறே தோள்மேல் அமைந் தார். அதனை உண்மையென்ன் நினைந்து கண் விழித் தேன். உடன் அவர் என் நெஞ்சில் விரைந்து புகுந்து ஒளிந்துகொள்கின்ருர். ჭ7 {)

152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/164&oldid=555661" இலிருந்து மீள்விக்கப்பட்டது