பக்கம்:குறள் நானூறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெஞ்சமே என் காதலருடைய நெஞ்சு அவரைவிட்டு நீங்காமல் அவருக்குச் சார்பாக உள்ளது. இதனை அறிந்த நீ எனக்குச் சார்பாகஇல்லாமல் என்னை நீங்கி அவர்பால் ஓடுவது ஏன்? 386

நெஞ்சே! நீ என்னேவிட்டு அவர் பின்னே அவர் வயப்பட்டுச் செல்வது நன்ருே? இப்படிச் செய்வது 'உலகில் செல்வம் கெட்டவர்க்குத் துணைநிற்கும் நண் பர் இலர்” எனும் தொடரின் இலக்கியம்என்பதோ?387

எனது நெஞ்சு உயிர்மேல் காதலுடையது. காதலர் பிரிவால் உயிரைவிட விரும்பாதது. எனவே பிரிந்து வராத காதலரைக் குறைகூறி இழிவாகப் பேசுதல் தாழ்வாகும் என்று எண்ணுகின்றது. எண்ணி அவரது குணத்திறமைகளையே பேசுகின்றது. 3 & 8

ஊடல் உப்பு போன்றது. உணவில் உப்பு அள வோடு அமைதலே சுவை. அதுபோன்று, ஊடலை அளவோடு கொள்ளுவதே இன்பம். சிறிது நேரம் நீட்டித்தாலும் உணவில் உப்பு மிகுதியாக அமைந்து கரிப்பது போன்று வெறுப்பாகும். 389

ஊடல் கொண்ட காதலியரது ஊடலை உணர்ந்து அவரை அன்புகாட்டித் தழுவ வேண்டும். தழுவாது விடுதல் நீர் இல்லாமல் வாடிய வள்ளிக்கொடியினது வேரை அடியோடு அரிந்துவிடுவது போன்ற அழிவை உண்டாக்கியதாகும். - 390

I 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/172&oldid=555669" இலிருந்து மீள்விக்கப்பட்டது