பக்கம்:குறள் நானூறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தில் குற்றம் இல்லாதவன் ஆதல் வேண்டும். அஃதே அறம். அந்த அளவே அறம். மனக்குற்றத் துடன் செய்யப்படும் பிற செயல்கள் எல்லாம் வெற்று: ஆரவாரத் தன்மை கொண்டவை. 11

பொருமை, பொருமையால் முளேக்கும் அவா, அவாவால் எழும் சினம், சினத்தால் கூறப்படும் கடுஞ்சொல் ஆகிய நான்கும் மனக்குற்றங்கள். இவைகளை நீக்கிச் செய்யப்படுவதே அறம். 1 &

- அறத்தை முடிந்த வகையில் எல்லாம் செய்க! நீக்காது தொடர்ந்து செய்க! வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் செய்க! 13

பல்லக்கைச் சுமந்து செல்பவர் யாவரும் அறம் செய்யாதவர் ஆகார்; ஏறிச் செல்பவர்

யாவரும் அறம் செய்தவர் ஆகார். எனவே, இந்நிலையைக் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூற வேண்டா. 14

ஒருவன் செய்யத் தக்கது மனக்குற்றம் இல்லாத அறச்செயலே. செய்யாமல் நீக்கி உய்யத் தக்கது. பழிச்செயலே, - 15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/18&oldid=555515" இலிருந்து மீள்விக்கப்பட்டது