பக்கம்:குறள் நானூறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் பெறவேண்டிய பேறுகள் பல. யாம் அறிந்தவரை அவற்றுள், தம் அறிவின் திறத்தை அறியும் மக்களைப் பெறுதலே நல்ல பேறு. பிற எல்லாம் சிறந்த பேறுகள் ஆகா. 26

தந்தை தன் மகனைச் சான்ருேர் கூடிய அவையில் முதன்மைத் தகுதியில் அமையுமாறு அறிவும் பண்பும் தந்து ஆளாக்க வேண்டும். இஃதே தந்தை ம்க னுக்குச் செய்யும் நன்மை. 27

தம் மக்களது அறிவுடைமை தமக்கு ജൂിക്കഥ தருவது. அதனினும், தம்மைவிட உலகத்து உயிர் களுக்கு எல்லாம் இனிமை தருதலே சிறந்தது. 28,

தன் மகன் அறிவும் பண்பும் நிறைந்தவன் @了gö官 நல்லவர் கூறக் கேட்கும் தாய் உவப்பாள். அவனைப் பெற்றெடுத்த நேரத்தில் உவந்ததைக் காட்டிலும் மிக உவப்பாள். 29.

'இவனை மகளுக அடைய இவன் தந்தை என்ன நோற்ருனே என்று நல்லோர் புகழ வேண்டும். இதற்குத் தக்தவாறு ஒழுகுதலே மகன் 5ಣ5ಕೆಲ್ಜ

செய்யும் நன்றி.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/24&oldid=555521" இலிருந்து மீள்விக்கப்பட்டது