பக்கம்:குறள் நானூறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு எவரிடமும் உறவாடும் ஆர்வத்தைத் தரும். அந்த ஆர்வம் நட்பு என்னும் தேடக் கிடைக் காத சிறப்பைத் தரும். - - $彦

அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாகக் கொள்ளும் அவாவுள்ளவர்; அன்பைப் பெற்றவர் தம் எலும்பையும் பிறர்க்கு உரிமையாக்கும் பிறர் நல உணர்வு உள்ளவர். 霹笼

அன்பைப்பற்றி ஆறியாதவர் அன்பு அறத்திற்கு மட்டும் துணை என்பர். ஆன்பைப்பற்றி அறிந்தவர் அறத்திற்கு மாருன, மறத்தைக் கெடுக்கவும் அன்பு $

துணை நிற்பதை அறிவர். శ్రీ

ஈரமற்ற வன்மை நிலத்தில் பட்டமரம் தளிர்க், காது. அது போன்று அன்பு இல்லாத உள்ளத்தைப் பெற்றவரது வாழ்வும் தழைக்காது. 34.

அன்பு வழியில் செயலாற்றும் உடம்பே உயி' ரோட்டம் உள்ள உ ட ம் பாகு ம்; அன்பில்லாத உடம்பு எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட இறைச்சி மூட்டையாகும். 蕊

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/26&oldid=555523" இலிருந்து மீள்விக்கப்பட்டது