பக்கம்:குறள் நானூறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநாள் வாழ்வைத் தரும் அமிழ்தமே. யானுலும் விருந்தினரை வீட்டின் புறத்தே வைத்துத் தான் மட்டும் உண்ணுதல் விரும்பத்தக்க செயல் அன்று. 36

நாள்தோறும் இல்லத்திற்கு வரும் விருந்தினரைப் போற்ற வேண்டும்; போற்றுபவனது வாழ்க்கை வருந்திக் கெடுவது இல்லை. - 37

விருந்தோம்பல் ஒரு வேள்வியாகும். அவ்வேள்வி யின் பயன் இந்த அளவு என்று ஒர் அளவை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கேற்ற" அளவை உடையதாகும். 38

செல்வச் செழிப்புள்ளும் ஒரு வறுமை உண்டு. அது விருந்தோம்பல் செய்யாத அறியாமை. அது மடையர்களிடமே உண்டு. 39

விருந்தினர் அனிச்ச மலர் போன்றவர்; அனிச்ச மலரோ மோந்தால்தான் வாடும்; விருந்தினர், முகம் சுளித்துப் பார்த்த அளவில் வாடுவர். 40.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/28&oldid=555525" இலிருந்து மீள்விக்கப்பட்டது